Monday, November 16, 2009

நன்றி, நமஸ்காரம்

நன்றி, நமஸ்காரம்


தமிழிலக்கியத்தில் ஞான் பயணிக்கத் தொடங்கிய பிறகு, பலரையும் சந்தித்திருக்கிறேன்.
தமிழ், மலையாளம், மலாய், சீன, ஆங்கில, மொழி, என எந்த ழுத்தாளர்களை,சந்தித்தாலும் , ஞான் கவனிக்கும் ஒரே விஷயம், அவர்களின் இலக்கியத்துக்கும், அவர்களை நேரில் காணும்போதுள்ள, உரையாடலில் தெறிக்கும் சிந்தனைக்குமிடையேயான,
in between linesல் ஞான் எப்படி தொடர்வது, என்பதே.

என்டெ மனசுக்கு நிறைவு கிட்டினால் மட்டுமே, பிறகேஅவர்களை நேர்காணல் செய்கிறேன்.
மின்தமிழில் பிதாமகனாக நாம் மதிக்கும் நரசையா சாரும், அவரது மனைவி, ஸ்ரீமதி லக்‌ஷ்மி அம்மாவும் சிங்கை வந்துள்ளனர்.புதன்கிழமை சகோதரர் மணியம் அருமையாய்,
நரசையா சாரை, சிராங்கூன் சாலை உணவகத்துக்கு,அழைத்துவந்தபோது பேசிய சில நிமிஷங்கள்,வீட்டில் ஸ்ரீமதி லக்‌ஷ்மி அம்மையின் அழகு கொஞ்சும், மலையாள உரையாடலூடே, சாருடன் பேசிக்கொண்டிருந்தபோதும் சரி.ஞான் நமஸ்கரித்தபோது, பெரியவர்களாய், தம்பதி சமேதராய் என்னை ஆச்சிர்வதித்தபோதும் சரி,
ஞான் சந்தோஷித்ததெல்லாம்,தமிழிலக்கியம் தந்த ஆனந்தம் தானே இவர்கள் என்பதே.
இதுபோன்றே அன்பு சகோதரர், அருண் மகிழ்ணன்,--ப்ரியாவின் வீட்டில் நேற்றிரவு நிகழ்ந்த இலக்கியக்கூடலில், அன்பான விருந்தில், மலேசியாவிலிருந்து வந்திருந்த எங்கள் சுழல்பந்துசார், திருமதி, அவர்களின் பேரக்குழந்தை, கண்மணிக்குட்டி[ என்டெ நெஞ்சோடணைத்த குழந்தையின் மென்மை இன்னும் கூட மலரிழையாய் என்னை கொஞ்சுகிறது] என சந்தித்தது இன்னொரு இனிய மகிழ்வு.


எங்களின் இலக்கிய அலசல், நவீனத்துவத்தில் இன்றையநிலை, என மனம் விட்டு பேசிவிட்டு வந்த மகிழ்வு, ரொம்ப காலத்துக்கு மனப்பேழையில் பொன்துணுக்காய் பட்டுப்போல் எங்கேனும் ஒளிந்திருக்கும். உவமித்து எழுதவேண்டுமே,என்ற கிண்ணாரம்போய்,பொறுப்பாய் எழுதும் நுண்பார்வையில், அகம் மகிழ்ந்து இன்றைய பூச்செண்டை யாருக்குக் கொடுப்பது?
இத்தனை அருமையான மனிதர்களை எல்லாம்,ஒன்றினைத்த மின்தமிழுக்கு, கொடுத்தால் போதுமா? பழம் நூல்கள், ஓலைச்சுவடி, எனும் பொக்கிஷஙகள் ,
என சேகரிக்கப்போய், இன்று விக்கிபீடியா வரை போயிருக்கிறதே நமது மின் வளர்ச்சி !.
இலக்கியமா, ஆன்மீகமா, உலகச்செய்தித் தொகுப்பா? வரலாறா? சரித்திர ஆய்வா? என்ன வேண்டும்? மின்தமிழில் அலச அற்புதமான மனிதர்கள் உண்டு இங்கே?
மின்தமிழின் என்டெ அனைத்து சொந்தங்களையும்,பெருமிதத்தோடு சொல்லப்போனால், கண் பட்டுவிடும். அதனால் அண்மைய முயற்சியான விக்கிபீடியாவை தொகுத்தளித்த, சுபாஷினி, வினோத்ராஜன், ஆகிய இருவருக்கும்,எங்கள் ஆழ்வார், முனைவர் கண்ணனின்
திருக்கரங்களால், இன்றைய பூச்செண்டை அளிப்பதோடு விடைபெறுகிறேன்.

நன்றி, நமஸ்காரம்.


அன்புடன்,
கமலம்