Monday, September 28, 2009

All literatures are morals: Morals are not literatures

All literatures are morals: Morals are not literature ---- Oscar Wilde

இலக்கியம் படைத்தல் என்பது, படைப்பாளன் தன் உள்ளொளியைத் தேடும் தேடல் மட்டும்தானா?அல்லது சமுதாய சிந்தனையும், சமூகப் பிரக்ஞையை அலசுவதும் மட்டுமே தானா இலக்கியம்?
No,No, my dear friends.!.இலக்கியம் வழி ஞான் பயணிக்கும்போது , எமது அகமும் புறமும் நோக்கிய கற்பனைரூபம், நிஜரூபமாக வாக்கியப்படிமங்களில், வடிவம் பெறும்போதுதான்,எமது கலையின் மீட்சி , தகதகக்கும் செப்புப்பட்டயமாய்,
என்னுள் நிறைவுபெறுகிறது. இந்த தரிசனம் மிக சின்ன வயதிலேயே, எனக்குக் கிட்டிய அனுபவம் கூட, ஒரு சுவையான நிகழ்வே. எந்த தமிழ் எழுத்தாளரைக்கேட்டாலும் , புதுமைப்பித்தன்,ஜெயகாந்தன், தி.ஜா, ல.ச.ரா.என இப்படித்தான் , அவர்கள் ஆதர்சத்தை
அடையாளம் காட்டுவார்கள். ஆனால் இவளுக்கு அந்த பாக்கியமே இல்லை.வீடெல்லாம் புத்தகங்கள் இறைந்து கிடக்கும்.

தமிழாசிரியர் மூலம் தான் அவரது பெரிய பெரிய சங்க இலக்கிய நூல்கள் எல்லாம் படிக்கக் கிடைத்துண்டு. ஆசை ஆசையாய் படித்துப்பார்ப்பாள். ஆனால் அவளுக்குத்தான் புரியாது.
ஆசிரியர் தெரிந்த வரை சொல்லிக் கொடுப்பார். [தொல்காப்பிய பொருளதிகாரம் , போன்ற அரிய நூல்களையெல்லாம் அந்த சின்ன வயதிலேயே ஆசிரியர் வாசிக்கத்தருவார்,பின் ஆசிரியர் தமிழ்நாட்டுக்குத் திரும்பிப்போகும்போது, அத்தனை [9] புத்தகங்களையும் அவளுக்கே கொடுத்துவிட்டுப்போனார்.]
வாராவாரம் கிட்டும் தமிழ் நேசன் மட்டுமே அவளுக்கிருந்த ஒரே தமிழ் பத்திரிகைத் தொடர்பு.
நேசன் சிறுவர் அரங்கில் 4 பக்க கட்டுரைகளும், கதைகளும், எழுதிக்கொண்டிருந்த கால கட்டத்தில், ஒரு நாள் ஞாயிறு பதிப்பில்
பிரசுரமாகிய ”சுழல் பந்து” எனும் ஒரு சிறுகதை--- மிகவும் கவர்ந்தது.ஒரு ஆசிரியருக்கும் மாணவனுக்குமிடையேயான சம்பவக் கோர்வையை,
கதையாக்கிய வடிவம். படித்து முடித்ததும் ஒரு நிமிஷம் அப்படியே மனசில் நிலைத்துவிட்டது.

a thin plot ! simple plot ! why not ? a common plot too !
ஆனாலும் அக்கதை அந்த 13 வயதுச்சிறுமியை அப்படி ஆக்ரமித்தது. சிறுகதைகளின் மூலம்
கட்டமைக்கக் கூடிய பெருமிதமே, நடப்பியல் அழகை வாசகனுக்கு அவனையறியாமலேயே ஊட்டுவதுதானே? classism, aestheticism,romanticism,realism, symbolism,என அனைத்துக் கோட்பாட்டுணர்வையும், அந்தந்த காலகட்டத்துக்கேற்ப,
எழுதப்படும்,கதைகள் மட்டும்தான் வெற்றி பெறுகிறதா, ?என்பதும் கூட இங்கு சிந்திக்கப்படல் வேண்டும்.
உத்தி, உள்ளீடு, இவற்றையும் தாண்டி உருவகம், இந்த சிறுகதையில் மிக அழகாக கொண்டு செல்லப்பட்டுள்ளதுகூட, அண்மையில் தான் கவனித்தாள். ஒரு இளம் ஆசிரியரின் மாணவ கோபத்தை,சலிப்பை, பிரச்சாரமற்ற எழுத்து நடையில்,சிறுகதைக்குரிய எல்லைக்கோடுகளை
தாண்டாமல், மிக இயல்பாக எழுதப்பட்டுள்ளது. இவ்வளவு ஆண்டுகட்குப்பின்னரும், இன்றும் படிக்கும்போதும் , இச்சிறுகதை, அப்படியொன்றும் நம்மை ஏமாற்றவில்லை. உலகின் மிகச்சிறந்த நாவல்களையெல்லாம் படித்து ஆய்விலக்கிய பார்வையில்
சிந்தித்ததுண்டு. உவமித்து எழுதும் வரிகளில் கூட இலக்கியம் தேடுபவள் ஞான் ,என்பது என்னை அறிந்தவர்கள் அறிவார்கள். அப்படியாயின் சுழல்பந்து சிறுகதை, எழுதிய கதாசிரியருக்கு இவ்வாரப்பூச்செண்டு கொடுப்பதில், எனக்கு மட்டுமா மகிழ்வு? அடடா? யாரிந்த சுழல் பந்து சார் என்று சொல்லவில்லையே?

வேறு யார்? மலேசியாவின் மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்கள் தான்.
தமிழிலக்கியத்தில் எமது முதல் சிறுகதையாசிரியர் சுழல் பந்து சாருக்கு நமஸ்காரம்.

Monday, September 21, 2009

குங்குமப்பூவே-கொஞ்சும் புறாவே

குங்குமப்பூவே-கொஞ்சும் புறாவே!

இவள் நாடகாசிரியரானதே சற்றும் எதிர்பாராத விபத்து.உலகிலேயே பிடிக்காத ஒரு சமாச்சாரம் உண்டென்றால் அது நாடகம்தான் என்பது,குழந்தைக் காலத்தில் இவளுள் ஊறிப்போன ஒரு மாயை.பின் எப்படி இவள் நாடகாசிரியரானாள்? wait, அதற்குள் அவசரப்பட்டால் எப்படி?[ஞானே படபடப்பு மாதங்கி, இதில் நீங்களும் படபடத்தால் ”காச் மூச் கபர்தார்” ,கேஸ்தான்,பின் என்னாகும்? அந்தர்தியானமாகி விடுவேனாக்கும்]so,பொறுமை, பொறுமை, o.k. மேடை நாடகத்துறையை விட்டு முற்றாக விலகிவிட்டாலும் கூட, இன்றும் வானொலியிலிருந்து சிறப்பு நாடகங்கள் எழுத அழைப்புவரும்போது,மிக சந்தோஷமாக எழுதிக்கொடுக்க முடிகிறது.ஒன்றுமட்டும்நிச்சயம்.அறுதியிட்டுக் கூறமுடியும்.
எழுத்துதான் இவள் இலக்கு.அப்படித்தான் இவளும் நம்புகிறாள். அப்படியானால் அன்று நடந்தது என்ன? என்னதான் நடந்ததாம்?
[secondary two]அதாவது உயர்நிலை 2ம் படிவத்தில் படித்துக்கொண்டிருந்தபோது,நெற்றியில் கோபி சந்தனக்குறியும், இரட்டைச்சடையுமாக,பள்ளிச்சீருடையில் , அந்தப் பெண்ணுக்கு பெரிய லட்சியங்களெல்லாம் கிடையாது.ஆனால் பள்ளி மிகவும் பிடித்தமான இடம். ஆனால் அந்த ஆண்டு கலைநிகழ்ச்சிக்கு, ஒரு இந்திய நடனத்துக்கு, இவளும் ஷேகரும் தேர்வு செய்யப்பட்டபோது, இருவருமே தேள் கொட்டினாற்போல் துடித்துப்போனார்கள். இவளின் நம்பர் ஒன் எனிமி ஷேகர்.

அவனுக்கும் அப்படியே. 2 எனிமிகளும் எங்காவது டான்ஸ் ஆடுவார்களா சார்? ஆனால் அந்த அருந்தவ மகா புண்ணியத்தை செய்தவர்கள் மிஸ்டர் வெங்கா. வும் மிஸ் பாப்பாத்தியும் தான்.ஏனென்றால் அவர்கள் தான் கலை நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர்கள்.மிஸடர் வெங்கா ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டே வக்கீலுக்குப் படித்துக் கொண்டிருந்தார்,
ஆங்கிலப் புகழ்பெற்ற வெளிநாட்டு இதழ்களில் எல்லாம் அவரது கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தது.அற்புதமான அவரது எழுத்தாற்றலில் பள்ளியே பெருமை கொண்டிருந்தது.தமிழ்நேசனில் இவளது மேனாட்டுத்தமிழறிஞர் கட்டுரை வெளிவந்த அன்று வகுப்புக்கேத் தேடிவந்து, who is kamaladevi here? என்று Mr.ngகிடம்கேட்டுஅவளை மனதாரப் பாராட்டியவர். ஆனால் அவர் பேசும் தமிழ் வேறுமாதிரி. ” ரொம்ப நன்னா எழுதறே” என்பார். ”நன்றாக” என்று சொல்ல மட்டார்.இப்படி பல சொற்கள் அவர் பேசும்போது திருத்தணும் என்று யோசித்ததுண்டு.ஆனால் தைரியம் தான் வரவில்லை.
அதை விட கோபமூட்டும் கொடுமை ஒன்றையும் அவர் செய்தார் .அவளைப் பார்க்கும்போதெல்லாம் ”புதுசா என்ன எழுதிண்டிருக்கே மலயாளத்துக்குட்டி,” என்பார். பாருங்கள்.!

அப்பொழுது இவளுக்கு 14 வயது.உயிரினும் இனிய தோழி tan siew kimமோடு நடந்து வரும்போது, இவள் மலையாளியே என்றாலும் கூட, சீனத்தோழியின் முன்னால், மலையாளத்துக்குட்டி, என்றழைப்பது எந்த வகையில் நியாயம்?
பிறகு இவர் என்ன படித்து, என்ன கிழித்து, என்ன லட்ஷணம்? இந்த லட்ஷணத்தில்தான் 2 எனிமிகளை தமிழ் டான்ஸுக்கு தேர்வு செய்தார் வெங்கா சார்! என்ன பாடல் தெரியுமா? சந்திரபாபு பாடிய, ”குங்குமப்பூவே, கொஞ்சும் புறாவே, தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே?”என்ற பாடல்தான். அப்பொழுதே அது பழைய பாடல்தான்,என்றாலும் மிஸ்டர் வெங்காவுக்கு மிகவும் பிடித்தமான பாடலாம்.வகுப்பு முடிந்து ஒரு மணி நேரம் ஒத்திகை நடக்கும்.மிஸ்.பப்பாத்தி ஸ்டெப்ஸ் வைத்து ஆடவும் வளையவும் எல்லாம்,ஷேகருக்கும் இவளுக்கும் கற்றுக் கொடுத்தார். 3வது நாள் மிஸ்டர் வெங்காவும் கற்றுக்கொடுப்பதில் இணைந்து கொண்டார். ஒரு கட்டத்தில், ”சந்தனப்பொட்டும் தாவணிக்கட்டும் சலசலக்கையிலே,என்மனம் தொட்டு ஏக்கமும் தொட்டு என்னமோ பண்ணுதடி!” என்ற வரிகளுக்கு, வெங்கா சார் டீச்சரின் பின்னால் நின்றுகொண்டு அவரின் இடுப்பை பிடித்துக்கொள்ள, டீச்சர் அப்படியே அவரின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, போக்கிரி போக்கிரி ராஜா, போதுமே போதுமே ராஜ்ஜாஆ, என்ற வரிகளில் , மெய்ம்மறந்து ஆடிய காட்சி கண்கொள்ளா காட்சி. அடுத்த கணம் இவளுக்கே வெட்கமாகப் போய்விட்டது.இவள் ஷேகரைப்பார்க்க ஷேகரும் இவளைப்பார்த்தபோது, இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது,சண்டை, பகை எல்லாமே மறந்துபோய் ஷேகர் இவளிடம் மெல்லிய குரலில் கூறினான்.they are in love!

இவள் அதிர்ந்து போனாள்.வெங்கா சார் மணமானவர்.ஒரு சின்னக்குழந்தை கூட உண்டு.எப்படி மிஸ் பாப்பாத்தியை இவர் லவ் பண்ணலாம்.???அப்பாவி வசந்தன் சாரை வேண்டாம் என்று சொன்னதற்கு காரணம் இதுதானா? தக்‌ஷணமே சாரையும் டீச்சரையும் இவளுக்கு பிடிக்காமல் போய்விட்டது. ப்ளிட்ஸ் வைத்த ஸ்கர்ட்டும், வெள்ளை பஃப் வைத்த ப்ளவுஸுமாய் , டீச்சர் சுழன்றுஆடிக்கொண்டே மதிமயங்கி, அப்படி ஒரு உல்லாசமாக ஆடுவார்.வெங்கா சார் அவர் கைகளால் சுழற்றிவிட, மீண்டும் டீச்சர் சாரின் கைகளில் சாய்வார். குப்பென்று கோபமும் வெட்கமுமாய் இவள் ஷேகரிடம் கூறினாள்.
”நீ ஒருபோதும் என் இடுப்பைத்தொடக்கூடாது!” பட்டென்று ஷேகரும் கூறினான்.”நீயும் என் நெஞ்சில் சாயக்கூடாது.” பின் என்ன ?we are good students., நாங்களொன்றும் bad students அல்ல.ஆனால் டீச்சரின் ஸ்டெப்ஸ்களிலிருந்து தப்புவதெப்படி?
அந்தக் கவலையே வேண்டியிருக்கலை.பாடல் ஆடிக்காட்டியதும் ,டீச்சரும் சாரும்,சீனியர் ஸ்டூடண்ட்சிடம் இவர்களை விட்டுவிட்டு காணாமல் போய் விடுவார்கள்.ஒவ்வொரு நாளும் டீச்சரும் சாரும் எல்லையில்லா மகிழ்வோடு

[தங்கமே உன்னைக்கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே”என்ற வரிகட்குஆடும்போது அவர்கள் முகத்தில் மின்னும் பரவசத்தை மட்டும் வெட்கம் வெட்கமாய் ரசித்ததை மறக்கவே முடியவில்லை.] பாடலின் ஒவ்வொரு வரியையும் தமிழாசிரியரிடம் கேட்டுக்கேட்டு தெளிவுபெற்று,எப்படியோ ஒருமாதிரி, ஷேகரும் இவளுமே நடனத்தை வடிவமைத்தார்கள். சத்யமாயிட்டும் இடுப்பும் நெஞ்சும் தொடப்படவில்லை. நிகழ்ச்சி அன்று இவர்களின் குங்குமப்பூவே நடனத்துக்கு 2ம் பரிசு கிடைத்தபோது, ”மலையாளத்துக்குட்டி, பள்ளி மானத்தைக்காப்பாற்றிவிட்டாயே” என்று வெங்கா சார் தேடி வந்து பாராட்டியபோது, ஷேகர் முகத்தித் திருப்பிக்கொண்டான். பின்னாளில் இவள் நாடகப் பயிற்சியிலிருந்த போதுதான், அன்று theatrical signல் மிக முக்கியமான dramatic textல் , formal presentaation codeஐ த்தான், அது பற்றிய துளி அறிவு கூட இல்லாமலே, ஷேகரும் இவளும் அந்த சின்ன வயதிலேயே வடிவமைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது ஏனோ இன்றும் பெருமிதமே.

கலையறிவு என்பது எங்கிருந்து வருகிறது?ஒவ்வொரு இலக்கியவாதியுமே அடிப்படயில் கலைஞனே>ஆனால் அந்தக்கலைஞர்களும் உணர்வால் குழந்தைகளே?!!!மனதால் குழந்தைகளே,வாழ்வியல் பார்வையில்,அதீத காதலோடு மானுட நேசத்தை கொண்டாடும் அபூர்வர்களே?அப்படி எத்தனையோ பேர் நம்மிடையே உண்டு.அப்படி ஒரு கலைஞனை
எங்கு சந்தித்தாலும் நாமும் தான் கொண்டாடுவோமே!.என்ன நஷ்டம் வந்து விடப்போகிறது?
.

Tuesday, September 15, 2009

எண்டெ ஹிருதயமே? ஐ லவ் யூ!!!

இப்படித்தான் 7ம் கிளாஸ் படிக்கும் போது. கல்யாணி டீச்சருக்கும்.
ஸ்ரீநிவாசன் சாருக்கும் ஒரு இது.
இவர்கள் மதுரையிலிருந்து திருப்பூவணம் தினமும் வந்து பாடம்
சொல்லிக்கொடுப்பவர்கள்.
எனவே பள்ளியே சில நேரம் அந்தரங்க அரங்கமாகிவிடுவதுண்டு.
`பசங்களா! 7ம் பாடத்தை நல்லா படிங்கண்ணு சொல்லிட்டு` கல்யாணி டீச்சர்
ஸ்ரீநிவாசன் சாரோட கடலை போட ஆரம்பிச்சுட்டாங்க!
இப்படி மாணவர்களுக்கு முன் செய்தால் நமக்கு படிப்பில் ஏன் புத்தி
போகிறது?
மெல்ல, மெல்ல அவர்கள் சம்பாஷணையில் லயித்து, ஓரிடத்தில் கல்யாணி
டீச்சருக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு ஊடே புகுந்து பதில் சொல்ல. நல்ல
அடி! பெரியவங்க பேச்சை ஏண்டா கேட்டேன்னு!
அன்றிலிருந்து இந்தப் பெரியவங்க விவகாரத்துக்கே போறதில்லை! ;-)

க.>



பாவம் வசந்தன் சார்.

அன்று துவங்கிய நிங்கள் தமிழ்த் தொண்டு துவளாமல் தொடர்ந்து வருகிறது.

பென்னேஸ்வரன்



This is really literature of the first order. I am thrilled to read this episode. I dont think even avant garde french writers did so well narrate an ordinary incident as our Kamalam has.Kudos to you and may God revive in writers this kind of sincereity amazed by the child like amusement!
Narasiah



சிரிக்கலை கமலம், அந்த வயசுப் பெண்ணின் மனநிலையைப் பிரதிபலிக்கும் கடிதம் இது.
நல்லா இருக்கு மலரும் நினைவுகள். பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.

Geetha Sambasivam


சகோதரி கமலம் அவர்களே

நீங்கள் கவிதை எழுதியது அந்த பெண்ணிற்கு பிடிக்காமல் போனதன் காரணம் என்ன
தெரியுமா

1. அவள் அந்தரங்கம் நீங்கள் உணர்ந்து கொண்டது

2. பாப்பாத்தி என்று விளித்தது


பெண்களின் மனோ நிலையே விசித்திரம்தான்

ஒரு இரு வரிக் கவிதையில் நான் எழுதி இருந்தேன்


"தவிர்த்த பார்வை அதனால் தவித்த பாவை" என்று

பெண்கள் அவர்களைப் பார்த்தால் கோபிப்பார்கள்

பார்க்காவிட்டால் தவித்துப் போய்விடுவார்கள்
இது எப்போதும் பெண்களின் மன நிலை

நிங்கள் கவிதை ஆ சின்ன வயசிலேயெ ஒண்ணாங் க்ளாசாக்கம்

அன்புடன்
தமிழ்த்தேனீ


எங்கள் ஊரில் கவுண்டர்கள் குடும்பத்திலும் சில தலித்துக்கள் குடும்பத்திலும்
இப்படிப் பாப்பாத்தி என்கிற பெயர் உண்டு

பெண் கொஞ்சம் சிகப்பாக இருந்தால் பாப்பாத்தி என்று பெயர் வைப்பார்கள். என்
நண்பர்களின் சகோதரிகள் சிலரின் பெயர் பாப்பாத்தி.

எனக்கும் ஒரு பாப்பாத்தி டீச்சர் இருந்தார். ஆனால் அவருக்குக் காதல் கடிதம்
எழுதிக் கொடுக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை.

அந்த சொந்த டீச்சரே சொந்த முயற்சியில் சிலருக்கு சில காதல் கடிதங்கள் எழுதி
சில சிக்கல்களில பிறகு மாட்டிக் கொண்டதாக ஒரு சிறிய ஞாபகம்.
பென்னேஸ்வரன்


சேச்சி, சதியமாயிட்டு சிரிக்கண்டான்னு பறஞ்சால் எப்படி! ஒரு பெண்ணுக்கு எப்படி
ஆண் மனதில் வார்த்தைகள் வரும்? அதுவும் அந்த சின்ன வயதில்!
இன்னொரு வளர்ந்த பெண்ணுக்கு ஆணின் சொற்கள் சட்டென்று பிடிபடுமே!

பட்சே சுயம்பாயிட்டு வந்ந வார்த்தகள் சுந்தரமாயிட்டு உண்டு! எண்ட
முகமெல்லாம் சிரிப்பு பூத்து போயி!!

ஓகை நடராஜன்.

Monday, September 14, 2009

பாப்பாத்தி ஐ லவ் யூ

பாப்பாத்தி ஐ லவ் யூ



அப்பொழுது 13 அல்லது 14வயதிருக்கலாம்.அச்சாவுக்குத் தெரியாமல் ஒளிந்து, ஒளிந்து ,பல பெயர்களில் சிறுவர் அரங்கில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்த காலம்.அந்த மகத்தான பணிக்கு இவளுக்கு உதவியவர்,இவளது அருமை தமிழாசிரியர் .ஆங்கிலப்பள்ளியில் girl guide வகுப்புக்கு சனிக்கிழமை போனால், அந்த வகுப்பு முடிந்ததும், வீட்டுக்கு தெரியாமல் , தமிழ் சாரின் வகுப்பில் இவளே ஆசையோடு கலந்துகொண்டு ,[தமிழ்பயின்ற கதையும், பின்னர் பிடிபட்டபோது, வீட்டில் நடந்த கதை எல்லாம் இப்பொழுது வேண்டாம்] .இவள் எழுதும் கட்டுரைகளை வயதான அந்த ஆசிரியர், திருமிகுமுத்துவீராச்சாமி,
அவர்கள் தமிழ் நேசன் சிறுவர் அரங்கிற்கு அனுப்பி வைப்பார்.அந்த கட்டுரைகள், பேச்சுப்போட்டி, அண்டை மானிலங்களில் நட்க்கும் கட்டுரைப்போட்டிகளுக்குகட்டுரை எழுதி அனுப்புதல் என , மாகாணத்திலேயே முதல் பரிசு எனக் கட்டுரைகளுக்கு, அவள் பரிசுகள் பெற்று பள்ளிக்கு பெருமை வாங்கிகொடுத்த,கால கட்டத்தில் ஒரு நாள் , இண்டர்வெல் நேரத்தில், அவளது ஆங்கில ஆசிரியர் அழைப்பதாக, இவளது உயிர்த்தோழி tan siew kim வந்தழைக்க ஓடோடி ஆசிரியரின் அறைக்குள் சென்று நின்றாள்.
mr.vasanthan,சார் இளைஞர். அருமையாக லிடெரேச்சர் கற்பிப்பார்.
merchant of venice, romeo juliet பற்றியெல்லாம் அப்பொழுதே இவர்களின் கேள்விகட்கு அழகாக விளக்கம் சொல்வார்.


நீ தமிழில் ரொம்ப ஸ்மார்ட் என்று எல்லோரும் சொல்கிறார்கள்., எனக்கு தமிழில் ஒரு கடிதம் எழுதித்தரமுடியுமா? என்று அவர் தயக்கத்தோடு ஆங்கிலத்தில் கேட்க,இவளுக்கானால் என்னவோ மாஹாகவியே இவளுக்கு பட்டயம் கொடுத்ததுபோல் அப்படியொரு பெருமை.
வசந்த்ன் சாருக்கு இவள் தமிழில் கடிதம் எழுதிக்கொடுக்க வேண்டுமா?
மிஸ்.பாப்பத்திக்கு ஒரு லவ் லெட்டர் எழுதவேண்டும் அழகான தமிழில் , ரொம்ப அழகாக எழுதிதரவேண்டும் செய்வாயா கமலா, என்று,தயங்கித் தயங்கிக் கேட்க ,அப்படியே வெட்கமாகப் போய் விட்டது.ப்லீஸ், கமலா” என்று வசந்தன் சார் மீண்டும் கேட்க,
அதன் சீரியஸ் புரியாமல், ம்ம்.சரி சார், , நாளை எழுதிக்கொண்டு வருகிறேன் சார், என்றிட அவரது கண்களில் ஒளிர்ந்த மகிழ்வைப் பார்த்தபோதுதான் , மிஸ் பாப்பாத்தியின் மீது இவருக்கு இவ்வளவு அபிமானமா என்று ஆச்சர்யம் தோன்றியது.
மிஸ் பாப்பாத்தி கறுப்பு என்றாலும் அழகான குண்டு கன்னங்களும் வட்டக்கரிய விழிகளுமாக ரொம்ப ஸ்மார்ட்டாக இருப்பார்கள். [அவரும் ஆங்கில ஆசிரியைதான்-- மற்ற வகுப்புகளுக்கு], ஆனால் இவளது girl guide வகுப்புக்கு மிஸ் பாப்பாத்திதான் டீச்சர்..
இவளே டீச்சருக்கு ஆசையோடு மஞ்சள் ரோஜாப்பூ கொண்டுபோய் கொடுத்திருக்கிறாள்.
அவ்வளவு அருமையாக மாணவர்களை கவர்ந்த அன்பான ஆசிரியை.
அதுசரி? தமிழில் தான் காதல் கடிதம் எழுதவேண்டும் என்று இவருக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம் .வசந்தன் சாருக்குத் தான் தமிழே தெரியாதே?.ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை கூட,தமிழ் பேசத் தெரியாது. ஒருவேளை தமிழ் தெரியாத நின்னை ஞான் எதுக்கு காதலிக்கவேண்டுமென்று மிஸ் .பாப்பாத்தி கேட்டிருப்பாரோ? வசந்தன் சாரின் அச்சா தமிழர், அம்மா சைனீஸ் பெண். அப்படியென்றாலும் தினசரி ஆசிரியர் அறையில் சந்திக்கும் போது, காதலை சொல்லியிருக்கலாமே என்று இவள் ஒரு கணம் யோசித்ததுண்மை.அடடா, காதலை அப்படி மற்றவ்ர்கள் முன்னால் சொல்லமுடியாதல்லவா? உடனே அன்றிரவு எல்லோரும் தூங்கிய பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு கடிதம் எழுதினாள்.மறுநாள் வசந்தன் சாரிடம் கொடுத்துவிட்டாள். 2 நாட்களுக்குப்பிறகு, H.M, இவளை அழைப்பதாக அழைப்பு வர , H.M.அறைக்குள் நுழைந்தால் மிஸ்.பாப்பாத்தி ஒரு பக்கம், வசந்தன் சார் மறுபக்கம்,நின்று கொண்டிருக்க, இவளுக்கு ஒருகணம் ஒன்றுமே புரியவில்லை.
இவள் எழுதிய கடிதத்தை நீட்டி, இது நீ எழுதிய கடிதமா, என்று H.M.மிஸ்டர் லிம் கேட்க, இவளுக்கு அழுகையே வந்து விட்டது. வசந்தன் சார் மீது மன்னிக்க முடியாத கோபம் வந்தது.ஆனால் அவரோ நெருப்பு மாதிரி இவளை முறைத்துக்கொண்டு நின்றார்.
இவள் அழுதாள். தேம்பித்தேம்பி அழுதாள்..மிஸ் பாப்பாத்தி அருகே வந்து இவளை அணைத்துக்கொண்டார்.இவள் கண்ணீரைத் துடைத்து விட்டார்.

இனி யார் கேட்டாலும் இப்படி எழுதாதே, என்று வார்னிங்கோடு தலைமை ஆசிரியர் அனுப்பி வைக்க, அழுது கொண்டே வகுப்புக்கு வந்து விட்டாள். என்ன தான் நடந்ததாம்? இவளது கடிதத்தை வசந்தன் சார் பாப்பாத்தி டீச்சரின் கையில் கொடுத்த பிறகு , ஆசிரியர் அறையில் கூட இவர் முகத்தை ஏறிட்டு நோக்க டீச்சர் மறுத்துவிட்டாராம், இவர் வித்துப்போடிருக்கிறார்.
மறுநாள் காலையிலேயே டீச்சரின் முன்னால் போய் நின்றிருக்கிறார்.டீச்சர் கேட்டாராம்,
யார் இந்த கடிதத்தை எழுதித்தந்தார்கள் என்று சொல்லுங்கள், பிறகு எண்டெ பதிலை சொல்லுகிறேன் என்றாராம். வண்டு தானாக வலையில் விழுந்து விட்டது. விளைவு? டீச்சர் ஒரு வார்த்தை சொன்னாராம், “காதல் கடிதம் எழுதக்கூட ஒரு மாணவியின்உதவி தேடும் நிங்ஙளை ஞான் காதலிப்பேன் என்று எப்படி நினைத்தீர்கள்?

முதலில் அந்த கடிதத்தை ஒரு முறை யாராவது தமிழ் தெரிந்தவர்களிடம் காட்டிவிட்டு என்னிடம் கொடுத்திருக்கலாம். இந்த மலையாள காதல் கடிதம் படித்துவிட்டு ஞான் காதலிக்கணும் என்றால் , வாழ்க்கையில் எனக்கு காதலே வேண்டாம்”
ஆனால் வசந்தன் சாருக்கு டீச்சர்மீது கோபமில்லை. இவள்மீது தான் கண்மண் தெரியாத கோபமாம். தமிழ் தெரியாதென்றால் தெரியாது என்று சொல்வது தானே? ஏன் இப்படி என்னை அவமானத்துக்குள்ளாக்கனும், என்று கோபமோ கோபம் இவள் மீது. இவளைக்கண்டாலே, முகத்தைத் திருப்பிக்கொண்டு, வேகம் வேகமாக போய் விடுவார். வசந்தன் சார் அந்த ஆண்டு முடியும் வரை பிறகு வகுப்பில் இவளிடம் பேசுவதே இல்லை. இவள் நினைத்து நினைத்து அழுதாள், ஒருநாள்,தமிழ் ஆசிரியரிடம் ஒருமுறை சொல்லி அழுதபோது,
அவர் கேட்டார்.அப்படி நீ என்னதான் எழுதினே? இவள் சொல்லச் சொல்ல ,கேட்டுவிட்டு, தாங்கமாட்டாது அவர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். ஏன் சார் சிரிக்கிறீர்கள்.? என்று கேட்க தைர்யம் இல்லை, ”குழந்தைகளிடம் போய் காதல்கடிதம் எழுதக்கேட்டால் இப்படித்தான்,அவனுக்கு வேணும். பாப்பாத்தி கொடுத்த தண்டனை சரியானதுதான்,என்று சொல்லி மேலும் சிரித்தார். இவளுக்கு மிகவும் வருத்தம்.பள்ளியிலேயே வசந்தன் சாரின் பிரிய மாணவியாயிருந்த , இவள் கேவலம் ஒரு கடிதத்தால் அவருக்கு ஆகாதவளாயிட்டாளே? இன்றும் அந்தக்கடிதத்தை நினைத்தால் அவளுக்கொன்றும் சிரிப்பு வருவதில்லை. ஆனால் இவ்வார சாஹித்ய கமலம் தொடருக்கு இவள் எழுதப்போக,எடிட்டரே ஒரு நிமிஷம் சிரித்துவிட்டு, கமலம்.நீ தான் சாஹித்ய கமலம், அடுத்த வாரமும் இப்படி ஏதாவது இண்டெரெஸ்டிங்காக எழுதேன் என்றாரே, ! அது கூடப் பரவாயில்லை.கணவர் இந்த கடித வரிகள் கேட்டு, ப்லீஸ், ஞான் கோபமாயிருக்கும் போது மட்டும் இந்த கடிதத்தை எனக்குப் படித்துக்காட்டென் , இந்த வாரம் முழுவதும் எனக்கு கோபமே வராது என்று சொல்லி, சொல்லி, ------அவரும் சிரிக்கிறார். 13 வயதில் ஒரு மாணவி, அதுவும் பேச்சுத்தமிழே தத்திமுத்தி பேசிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ,எழுதியது என்பதை யாருமே உணரவில்லை.

அது தான் கொஞ்சம் வருத்தமாகப்போய் விட்டது. நிங்ஙள் சிரிக்க மாட்டீர்கள் என்றால்,
இதோ, இதுதான் அந்தக் கடிதம். படித்துவிட்டு நிங்ஙளே தீர்ப்பு சொல்லுங்கள் எண்டெ ஹிருதயமே! பாப்பாத்தி, ஞான் நின்னை நேசிக்கிறேன். நீயே என்டெ ஜீவன்,
நீயே என்டெ ஸ்வாசம், நீயல்லால் எனக்கு வாழ்க்கையே இல்லை. பாப்பாத்தி, ஒவ்வொரு நாளும் ரோஜாப்பூவைப் பார்க்கும்போதும் நிண்டெ முகம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது.
நாமிருவரும் பள்ளிக்கு பின்னாலுள்ள பார்க்கில் ஒரு நாளாவது அமர்ந்து நிம்மதியாக பேச வேண்டும்.
ப்ரேமம் என்றால் என்ன? எனக்கு சரியாகப் புரியவில்லை.நீ எனக்கு கற்றுக் கொடுப்பாயா?
பாப்பாத்தி,என்டெ பொன்னே, என்டெ முத்தே, நீ ஒரு நிலா. நீ ஒரு வீணை.
நீயே எனக்கு பூரண சந்திரன். பாப்பாத்தி ஐ லவ் யூ, நம்முடைய விவாஹத்துக்கு நினக்கு என்ன வேணும்/ பச்சைக்கல் மாலையா? பவழமல்லி நெக்லஸா? பீதாம்பர கல்சரமா?வர்ணாம்ஸ்ர பதக்கமா? என்ன வேண்டும் சொல் கண்ணே? என்டெ பெண்ணே? ஞான் வாங்கித்தருகிறேன். நிண்டெ சம்மதம் தெரிந்த பிறகு இன்னும் எழுதுகிறேன்.உடனே பதிலை எதிர்பார்க்கிறேன். பாப்பாத்தி, சதா நிண்டெ நினைவால் உருகி வாழும்,
நிண்டெ ஸ்வாமி திருவாளர் வசந்தன் அவர்கள்.

[காதலரை, என்னவென்று அழைப்பதென்று தெரியாததால் , ஸ்வாமி என்று இடவேண்டியிருந்தது.]



Email:- saahithyam@yahoo.com.sg